Thursday 13 August 2020

சேலம் கிச்சன் - பெங்களூரு by லோக்கல் டைம்ஸ் - Salem Kitchen - Bangalore by Local Times

சேலம் கிச்சன்  - பெங்களூரு    நமது   லோக்கல்   டைம்ஸ்   யூ   டியூப் சேனலில் கண்டு மகிழுங்கள், லைக் செய்யுங்கள், லோக்கல் டைம்ஸ் யூ டியூப் சேனல் சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்.

-----------------------------------------------------
powered by Surfing Waves

------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

-------------------------------------------------------

Friday 6 December 2019

ஸ்ரீ சௌடேஸ்வரி உணவகம், ஃபீனிக்ஸ் மால் எதிரில், பெங்களூரு - லோக்கல் டைம்ஸ்

லோக்கல் டைம்ஸ் யூ டியூப் சேனலில் இந்த வாரம்  பெங்களூரு ஃபீனிக்ஸ் மால் எதிரில் உள்ள ஸ்ரீ சௌடேஸ்வரி உணவகம் குறித்த அறிமுகம், உரிமையாளர் பேட்டி, விருந்தினர் பேட்டி இடம்பெறுகிறது. லோக்கல் டைம்ஸ் யூ டியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து வீடியோக்களை லைக் செய்து உங்கள் நண்பர்களுடன் முகநூல், வாட்ஸ் அப் குழுக்களில் பகிரவும்

-----------------------------------------------------
powered by Surfing Waves

------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

-------------------------------------------------------

Wednesday 6 November 2019

அன்னபூர்ணேஸ்வரி உணவகம், பெங்களுரு

பெங்களுரிலுள்ள, பி நாராயணபுரா பகுதியில் அமைந்திருக்கும் அன்னபூர்ணேஸ்வரி உணவகம்  பற்றிய அறிமுகம், வாடிக்கையாளர் பேட்டி மற்றும் உரிமையாளர் பேட்டி லோக்கல் டைம்ஸ் யூ டியூப் சேனலில் இந்த வாரம் இடம்பெறுகிறது. 

இதுவரை, லோக்கல் டைம்ஸின் யூ டியூப் சேனலில் இணையாதவர்கள் இணைந்து கொள்ள பின்வரும் இணைப்பை கிளிக் செய்து லோக்கல் டைம்ஸ் சேனலில் இணைந்து, சேனலை லைக் செய்யுங்கள் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு முகநூல், டிவிட்டர், வாட்ஸ் அப் சமூக வலைதளங்கள்   மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள். லோக்கல் டைம்ஸ் யூ டியூப் சேனல்: இங்கு கிளிக் செய்யவும் -
-----------------------------------------------------
powered by Surfing Waves

------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

-------------------------------------------------------

Saturday 19 October 2019

தந்தூரி சௌக் உணவகம், மகாதேவபுரா, பெங்களூரு

பெங்களூரில் உள்ள மகாதேவபுரா பகுதியில் அமைந்துள்ளது தந்தூரி சௌக் உணவகம், மார்த்தஹல்லியில் இருந்து கே.ஆர். புரம்  செல்லும் அவுட்டர் ரிங் ரோடில்  உள்ள  மகாதேவபுரா பஸ் ஸ்டாப்பில் இறங்கியவுடன் எதிர்புறம் மேம்பாலத்தில் கீழிருக்கும் சாலையை தாண்டியவுடன் பிரதான சாலையில் சிறிது தூரத்திலேயே தந்தூரி சௌக் உணவகத்தை காண முடிகிறது. சுவையான அசைவ உணவுகளுக்கு பெயர்பெற்றுள்ள இந்த உணவகம், பெயருக்கேற்றார் போல் தந்தூரி உணவு வகைகளை உணவுபிரியர்களின்  ரசனைக்கு ஏற்ப விசேஷமாக சமைத்து வழங்கி இந்த பகுதியில் பிரபலமடைந்து வருகின்றனர். 

இந்த உணவகத்தில் என்னென்ன உணவு வகைகள் விசேஷமாக கிடைக்கும் என்று அங்கிருந்த பணியாளரிடம் சிறிது நேரம் பேசிய பின்னர் அவர் ஆலோசனையின் படி  ப்ளைன் நான் மற்றும் சிக்கன் காலிமிர்ச் மசாலா ஆர்டர் காம்பினேஷனை தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்தேன். ஆர்டர் செய்த உணவு வருவதற்குள் அங்கு வந்திருந்த வாடிக்கையாளர் ஒருவரிடம் சிறு பேட்டியும் எடுத்து முடித்தேன்.

சில நிமிட காத்திருப்புக்கு பின் ப்ளேட்டில் சூடான நான் தொட்டு கொள்ள கிண்ணத்தில் சிக்கன் காலிமிர்ச் மசாலா டேபிளில் பறிமாறப்பட்டது, சரியான சூட்டில் நன்கு வெந்த நான் கூடவே காரம் அதிகமில்லாமல் அருமையான காலிமிர்ச் கிரேவி மசாலாவில் பதமாக வெந்த சிக்கன் கறி துண்டுகளின் சுவை பற்றி சொல்லவும் வேண்டுமா?  சுவையான அசைவ உணவு சாப்பிட்ட திருப்தியுடன் அன்றைய மதிய உணவு வேளை முடிந்தது. இந்த உணவகத்தில் பிரியாணியும்  மிகவும் விசேஷம் என்று அங்கு வந்து கொண்டிருந்த டேக் அவே ஆர்டர்களை பார்க்கும்போது தெரிந்தது. அசைவ உணவுப்பிரியர்கள் சந்தர்ப்பம் கிடைத்தால் தந்தூரி சௌக்கிற்கு ஒருமுறை  வந்து சாப்பிட்டு பாருங்கள்.

இந்த வாரம் லோக்கல் டைம்ஸில் தந்தூரி சௌக் உணவகம் பற்றிய அறிமுகத்துடன் பற்றி அங்கு சந்தித்த வாடிக்கையாளர் ஒருவரின் பேட்டி மற்றும் உணவக உரிமையாளர் திரு. அர்ஜுன் அவர்களின் சிறு பேட்டியும் காணொளி காட்சியாக இடம்பெறுகிறது.

இதுவரை, லோக்கல் டைம்ஸின் யூ டியூப் சேனலில் இணையாதவர்கள் இணைந்து கொள்ள பின்வரும் இணைப்பை கிளிக் செய்து லோக்கல் டைம்ஸ் சேனலில் இணைந்து, சேனலை லைக் செய்யுங்கள் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு முகநூல், டிவிட்டர், வாட்ஸ் அப் சமூக வலைதளங்கள்   மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள். லோக்கல் டைம்ஸ் யூ டியூப் சேனல்: இங்கு கிளிக் செய்யவும் -
-----------------------------------------------------
powered by Surfing Waves

------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

-------------------------------------------------------

Tuesday 8 October 2019

ஸ்ரீ மஞ்சுநாத் உணவகம் - பி. நாராயணபுரா, பெங்களூரு

பெங்களூரில் உள்ள பி நாராயணபுரா  பகுதியில் காமதேனு நகரில் உள்ளது ஸ்ரீ மஞ்சுநாத் உபகார், உபகார் என்றால் டிபன் என்று பொருள். இந்த உணவகம் வைட்ஃபீல்டு சாலையில்  இயங்கும் புகழ்பெற்ற வன்பொருள் தயாரிப்பு நிறுவனமான ஹெச்பி நிறுவனத்துக்கு இடது புறத்தில் செல்லும் சாலையில் சிறிது தூரம் உள்ளே சென்றால் வரும் காமதேனு நகர் பகுதியில் அமைந்துள்ளது. காலை 7 மணிக்கு சுடச்சுட இட்லி, தோசை, பூரி, வடை, கலந்த சாதம் கேசரிபாத், காராபாத் (நம்ம ஊரு ரவா உப்புமா) என்று வகைவகையாக இந்த உணவகத்தில் வழங்குகிறார்கள். பூரி, தோசை, மசாலா தோசை போன்ற உணவு வகைகள் நாம் ஆர்டர் செய்த உடன் சுடச்சுட தயார் செய்து தருகிறார்கள், சில நிமிடம் காத்திருந்தால் சூடான உணவு வகைகளை ருசிக்க முடிகிறது,

உணவகத்தில் நின்றுகொண்டே சாப்பிடுவதற்கு வசதியாக  வட்ட மேஜைகள் போடப்பட்டுள்ளது, நின்று கொண்டு சாப்பிட விரும்பாதவர்களுக்கு பார்சல் செய்தும் தருகிறார்கள், பார்சல் வாங்கிச் சென்று வீட்டிற்குச் சென்று நிதானமாக ரசித்து, ருசித்து சாப்பிடலாம், காலை 7 மணி முதலே இந்த உணவகத்துக்கு கூட்டம் வரத் தொடங்கி விடுகிறது, இங்கு நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே இந்த உணவகத்திற்கு வந்த ஒரு வாடிக்கையாளரிடம் பேச்சு கொடுத்தேன், கடந்த இரண்டு ஆண்டுகளாக காலை மற்றும் மதிய உணவு இங்கு தான் சாப்பிட்டு கொண்டிருப்பதாக கூறினார், சுவையும் தரமும் மிகவும் நன்றாக இருப்பதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார், அவரிடம் ஒரு சிறு பேட்டி எடுத்துள்ளேன். 

மேலும் இந்த உணவகத்தின் உரிமையாளர் திரு. பிரசாந்த் ஷெட்டி, அவர்களிடமும் ஒரு சிறு பேட்டி எடுத்துள்ளேன். அவை ஸ்ரீ மஞ்சுநாத் உபகார் உணவகத்தின் அறிமுகத்துடன் காணொளி காட்சியில் இடம் பெற்றுள்ளது. காலை மற்றும் மதிய நேரத்தில் மட்டுமே இந்த உணவகம் இயங்குகிறது.  சூடான சுவையான தரமான உணவு வகைகளை தருவது இந்த உணவகத்தின் பிளஸ் . மைனஸ் என்று பார்த்தால் சிறிய இடத்தில் இயங்குகிறது, நின்று கொண்டுதான் சாப்பிட முடியும். ஆனால்உணவின் சுவையும் தரமும் இந்த சிறு குறையை காணாமல் போகச் செய்து விடுகிறது.

இதுவரை, லோக்கல் டைம்ஸின் யூ டியூப் சேனலில் இணையாதவர்கள் இணைந்து கொள்ள பின்வரும் இணைப்பை கிளிக் செய்து லோக்கல் டைம்ஸ் சேனலில் இணைந்து, சேனலை லைக் செய்யுங்கள் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு முகநூல், டிவிட்டர், வாட்ஸ் அப் சமூக வலைதளங்கள்   மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள். லோக்கல் டைம்ஸ் யூ டியூப் சேனல்: இங்கு கிளிக் செய்யவும் -
-----------------------------------------------------
powered by Surfing Waves
------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

-------------------------------------------------------

Sunday 22 September 2019

சங்கராந்தி உணவகம், மார்த்தஹல்லி, பெங்களூரு Sankaranti Restuarant - Marthahalli, Bengaluru

பெங்களூரிலுள்ள, மார்த்தஹல்லி பகுதியில் உள்ள சங்கராந்தி உணவகத்துக்கு சென்ற வாரத்தில் ஒரு நாள் சென்று உணவருந்தினேன், அங்கு ஏற்கனவே ஒரு முறை சிக்கன் தம் பிரியாணி சாப்பிட்டிருக்கிறேன், ஆந்திரா ஸ்டைலில் நல்ல சுவையான பிரியாணி சாப்பிட்ட அனுபவம் கிடைத்தது, அப்போதிலிருந்தே இந்த உணவகம் குறித்து எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன், இந்த முறை தான் எழுத சரியான நேரமும்  வாய்ப்பும் கிடைத்தது. 

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு டிபிக்கல் ஆந்திரா மெஸ்ஸில் ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட அனுபவம் கிடைத்தது. வெஜ் மீல்ஸில் சுவையான பப்பு (பருப்பு),  சாம்பார், ரசம், தயிர், முருங்கைக்காய் கூட்டு, அப்பளம் தருகின்றனர், ஆந்திரா மெஸ்சுக்கே உரிய பருப்பு பொடியும், காரத் துவையலும்,  வத்தலும் இங்கு மிஸ்ஸிங், ஒவ்வொரு நாளும் சைட் டிஷ்ஷில்  மட்டும் மாற்றம் இருக்கும். ஆந்திரா ஸ்டைலில் ஃபுல் வெஜ் மீல்ஸ், சிக்கன் மீல்ஸ், சிக்கன் தம் பிரியாணி, சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி, சிக்கன் கபாப், முட்டை மசாலா, மட்டன் வறுவல் என்று அசைவ உணவு பிரியர்களுக்கு சரியான விருந்தளிக்கும் வகையில் இந்த உணவகத்தின் மெனு இருக்கிறது. 

உணவகத்தில் அமர்ந்து சாப்பிட மதிய நேரங்களில் கூட்டம் அலை மோதுகிறது, உணவகத்திலுள்ள அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டதால் பொறுமையாக காத்திருந்து சாப்பிட விரும்புபவர்கள் காத்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது, உணவகத்தின் முகப்பு பகுதியில் கறி பாயின்ட் என்ற பெயரில் உணவகத்தின் பார்சல் பிரிவு உள்ளது, காத்திருக்க விரும்பாதவர்கள் பார்சல் வாங்கிக் கொண்டு செல்கின்றனர்.

இந்த உணவகத்தின் மேலாளரும், உரிமையாளருமான திரு. கிரண் அவர்களை சந்தித்து ஒரு சிறு பேட்டியும் எடுக்க முடிந்தது, கிரண் அவர்களுக்கு தெலுங்கில் தான் சரளமாக பேச முடிந்தது, எனவே, பேட்டி தெலுங்கு மொழியில் இருக்கும், ஆனால் பேட்டியின் போது கீழே தமிழில் சப்டைட்டில் கொடுத்துள்ளேன், கிரண் அவர்கள் மூலமாக ஒரு தமிழ் பேசும் நண்பர் - (திரு. பார்த்திபன், காமாக்ஷி கிச்சன்.) மற்றும் அவர்களது குடும்பத்தினரின்  அறிமுகம் கிடைத்தது, கிரண் அவர்களிடம் தெலுங்கில் உரையாடி பேட்டி எடுத்தது திரு. பார்த்திபன்  அவர்கள் தான், இந்த பேட்டிக்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 

உணவகம் செல்ல விரும்புபவர்களுக்கு லேன்ட்மார்க்: மார்த்தஹல்லி பகுதியில் உள்ள ஜீவிகா மருத்துவமனை இருக்கும் தெருவிற்கு அடுத்த தெருவில் இந்த உணவகம் இயங்கி வருகிறது. சரியாக இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் யூ டியூப் காணொளி காட்சியில் உணவகத்தில் உணவகத்தின் கைபேசி எண்கள் உள்ளது, தொடர்பு கொள்ளுங்கள்.

இனி தொடர்ந்து உணவகங்கள் குறித்த காணொளி காட்சிகள் இந்த (லோக்கல் டைம்ஸ்) தளத்தில் இடம்பெறும், இதுவரை, லோக்கல் டைம்ஸின் யூ டியூப் சேனலில் இணையாதவர்கள் இணைந்து கொள்ள பின்வரும் இணைப்பை கிளிக் செய்து லோக்கல் டைம்ஸ் சேனலில் இணைந்து, சேனலை லைக் செய்யுங்கள் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு முகநூல், டிவிட்டர், வாட்ஸ் அப் சமூக வலைதளங்கள்   மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள். லோக்கல் டைம்ஸ் யூ டியூப் சேனல்: இங்கு கிளிக் செய்யவும்
-------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

-------------------------------------------------------

Saturday 31 March 2018

சாலையோரங்களில் கிடைக்கும் அச்சில் வார்த்த கலை படைப்புகள்

ஞ்சை மற்றும் குடந்தை நகரங்களில் சாலையோரங்களில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் அச்சு வார்ப்பு முறையில் செய்யப்படும் இந்த கலை படைப்புகள் விற்பனைக்கு வைக்கபட்டிருக்கின்றன, செய்தி காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் லோக்கல் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் லோக்கல் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 