Sunday 22 September 2019

சங்கராந்தி உணவகம், மார்த்தஹல்லி, பெங்களூரு Sankaranti Restuarant - Marthahalli, Bengaluru

பெங்களூரிலுள்ள, மார்த்தஹல்லி பகுதியில் உள்ள சங்கராந்தி உணவகத்துக்கு சென்ற வாரத்தில் ஒரு நாள் சென்று உணவருந்தினேன், அங்கு ஏற்கனவே ஒரு முறை சிக்கன் தம் பிரியாணி சாப்பிட்டிருக்கிறேன், ஆந்திரா ஸ்டைலில் நல்ல சுவையான பிரியாணி சாப்பிட்ட அனுபவம் கிடைத்தது, அப்போதிலிருந்தே இந்த உணவகம் குறித்து எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன், இந்த முறை தான் எழுத சரியான நேரமும்  வாய்ப்பும் கிடைத்தது. 

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு டிபிக்கல் ஆந்திரா மெஸ்ஸில் ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட அனுபவம் கிடைத்தது. வெஜ் மீல்ஸில் சுவையான பப்பு (பருப்பு),  சாம்பார், ரசம், தயிர், முருங்கைக்காய் கூட்டு, அப்பளம் தருகின்றனர், ஆந்திரா மெஸ்சுக்கே உரிய பருப்பு பொடியும், காரத் துவையலும்,  வத்தலும் இங்கு மிஸ்ஸிங், ஒவ்வொரு நாளும் சைட் டிஷ்ஷில்  மட்டும் மாற்றம் இருக்கும். ஆந்திரா ஸ்டைலில் ஃபுல் வெஜ் மீல்ஸ், சிக்கன் மீல்ஸ், சிக்கன் தம் பிரியாணி, சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி, சிக்கன் கபாப், முட்டை மசாலா, மட்டன் வறுவல் என்று அசைவ உணவு பிரியர்களுக்கு சரியான விருந்தளிக்கும் வகையில் இந்த உணவகத்தின் மெனு இருக்கிறது. 



உணவகத்தில் அமர்ந்து சாப்பிட மதிய நேரங்களில் கூட்டம் அலை மோதுகிறது, உணவகத்திலுள்ள அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டதால் பொறுமையாக காத்திருந்து சாப்பிட விரும்புபவர்கள் காத்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது, உணவகத்தின் முகப்பு பகுதியில் கறி பாயின்ட் என்ற பெயரில் உணவகத்தின் பார்சல் பிரிவு உள்ளது, காத்திருக்க விரும்பாதவர்கள் பார்சல் வாங்கிக் கொண்டு செல்கின்றனர்.

இந்த உணவகத்தின் மேலாளரும், உரிமையாளருமான திரு. கிரண் அவர்களை சந்தித்து ஒரு சிறு பேட்டியும் எடுக்க முடிந்தது, கிரண் அவர்களுக்கு தெலுங்கில் தான் சரளமாக பேச முடிந்தது, எனவே, பேட்டி தெலுங்கு மொழியில் இருக்கும், ஆனால் பேட்டியின் போது கீழே தமிழில் சப்டைட்டில் கொடுத்துள்ளேன், கிரண் அவர்கள் மூலமாக ஒரு தமிழ் பேசும் நண்பர் - (திரு. பார்த்திபன், காமாக்ஷி கிச்சன்.) மற்றும் அவர்களது குடும்பத்தினரின்  அறிமுகம் கிடைத்தது, கிரண் அவர்களிடம் தெலுங்கில் உரையாடி பேட்டி எடுத்தது திரு. பார்த்திபன்  அவர்கள் தான், இந்த பேட்டிக்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 

உணவகம் செல்ல விரும்புபவர்களுக்கு லேன்ட்மார்க்: மார்த்தஹல்லி பகுதியில் உள்ள ஜீவிகா மருத்துவமனை இருக்கும் தெருவிற்கு அடுத்த தெருவில் இந்த உணவகம் இயங்கி வருகிறது. சரியாக இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் யூ டியூப் காணொளி காட்சியில் உணவகத்தில் உணவகத்தின் கைபேசி எண்கள் உள்ளது, தொடர்பு கொள்ளுங்கள்.

இனி தொடர்ந்து உணவகங்கள் குறித்த காணொளி காட்சிகள் இந்த (லோக்கல் டைம்ஸ்) தளத்தில் இடம்பெறும், இதுவரை, லோக்கல் டைம்ஸின் யூ டியூப் சேனலில் இணையாதவர்கள் இணைந்து கொள்ள பின்வரும் இணைப்பை கிளிக் செய்து லோக்கல் டைம்ஸ் சேனலில் இணைந்து, சேனலை லைக் செய்யுங்கள் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு முகநூல், டிவிட்டர், வாட்ஸ் அப் சமூக வலைதளங்கள்   மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள். லோக்கல் டைம்ஸ் யூ டியூப் சேனல்: இங்கு கிளிக் செய்யவும்
-------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

-------------------------------------------------------