பெங்களூரில் உள்ள பி நாராயணபுரா பகுதியில் காமதேனு நகரில் உள்ளது ஸ்ரீ மஞ்சுநாத் உபகார், உபகார் என்றால் டிபன் என்று பொருள். இந்த உணவகம் வைட்ஃபீல்டு சாலையில் இயங்கும் புகழ்பெற்ற வன்பொருள் தயாரிப்பு நிறுவனமான ஹெச்பி நிறுவனத்துக்கு இடது புறத்தில் செல்லும் சாலையில் சிறிது தூரம் உள்ளே சென்றால் வரும் காமதேனு நகர் பகுதியில் அமைந்துள்ளது. காலை 7 மணிக்கு சுடச்சுட இட்லி, தோசை, பூரி, வடை, கலந்த சாதம் கேசரிபாத், காராபாத் (நம்ம ஊரு ரவா உப்புமா) என்று வகைவகையாக இந்த உணவகத்தில் வழங்குகிறார்கள். பூரி, தோசை, மசாலா தோசை போன்ற உணவு வகைகள் நாம் ஆர்டர் செய்த உடன் சுடச்சுட தயார் செய்து தருகிறார்கள், சில நிமிடம் காத்திருந்தால் சூடான உணவு வகைகளை ருசிக்க முடிகிறது,
உணவகத்தில் நின்றுகொண்டே சாப்பிடுவதற்கு வசதியாக வட்ட மேஜைகள் போடப்பட்டுள்ளது, நின்று கொண்டு சாப்பிட விரும்பாதவர்களுக்கு பார்சல் செய்தும் தருகிறார்கள், பார்சல் வாங்கிச் சென்று வீட்டிற்குச் சென்று நிதானமாக ரசித்து, ருசித்து சாப்பிடலாம், காலை 7 மணி முதலே இந்த உணவகத்துக்கு கூட்டம் வரத் தொடங்கி விடுகிறது, இங்கு நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே இந்த உணவகத்திற்கு வந்த ஒரு வாடிக்கையாளரிடம் பேச்சு கொடுத்தேன், கடந்த இரண்டு ஆண்டுகளாக காலை மற்றும் மதிய உணவு இங்கு தான் சாப்பிட்டு கொண்டிருப்பதாக கூறினார், சுவையும் தரமும் மிகவும் நன்றாக இருப்பதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார், அவரிடம் ஒரு சிறு பேட்டி எடுத்துள்ளேன்.
மேலும் இந்த உணவகத்தின் உரிமையாளர் திரு. பிரசாந்த் ஷெட்டி, அவர்களிடமும் ஒரு சிறு பேட்டி எடுத்துள்ளேன். அவை ஸ்ரீ மஞ்சுநாத் உபகார் உணவகத்தின் அறிமுகத்துடன் காணொளி காட்சியில் இடம் பெற்றுள்ளது. காலை மற்றும் மதிய நேரத்தில் மட்டுமே இந்த உணவகம் இயங்குகிறது. சூடான சுவையான தரமான உணவு வகைகளை தருவது இந்த உணவகத்தின் பிளஸ் . மைனஸ் என்று பார்த்தால் சிறிய இடத்தில் இயங்குகிறது, நின்று கொண்டுதான் சாப்பிட முடியும். ஆனால்உணவின் சுவையும் தரமும் இந்த சிறு குறையை காணாமல் போகச் செய்து விடுகிறது.
இதுவரை, லோக்கல் டைம்ஸின் யூ டியூப் சேனலில் இணையாதவர்கள் இணைந்து கொள்ள பின்வரும் இணைப்பை கிளிக் செய்து லோக்கல் டைம்ஸ் சேனலில் இணைந்து, சேனலை லைக் செய்யுங்கள் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு முகநூல், டிவிட்டர், வாட்ஸ் அப் சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள். லோக்கல் டைம்ஸ் யூ டியூப் சேனல்: இங்கு கிளிக் செய்யவும்
-
-----------------------------------------------------
powered by Surfing Waves
------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
- தமிழர் டைம்ஸ்
- மாணவர் டைம்ஸ்
- மகளிர் டைம்ஸ்
- இளைஞர் டைம்ஸ்
- டைம்ஸ் உலகம்
- ஹெல்த் டைம்ஸ்
- டெக் டைம்ஸ்
- சினிமா டைம்ஸ்
- வணிகர் டைம்ஸ்
- சுற்றுலா டைம்ஸ்
- நகைச்சுவை டைம்ஸ்
- டிரெண்ட்ஸ் டைம்ஸ்
- கோல்டன் டைம்ஸ்
- கிரைம் டைம்ஸ்
- உங்கள் டைம்ஸ்
- லோக்கல் டைம்ஸ்
- தொடர்புக்கு
-------------------------------------------------------